இலங்கை பிரதமர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அச்சுறுத்தும் உரையை ஆற்றினார்!!!!!!

இலங்கைப் பிரதமர் மகிந்த இராஜபக்ஷ, திங்கட்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவிற்கு அரசாங்கமே பொறுப்பாளிஎன்பதை மறுத்ததோடு, தனது சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யுமாறு கோரிபோராடிவரும் உழைக்கும் மக்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் எச்சரிக்கையையும் விடுத்தார்.
அரசாங்கம் ஆட்சியை தக்கவைக்க துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவசரமாக அறிவிக்கப்பட்ட உரை,தெரணதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படப்போவதாக அறிவித்ததையடுத்து, ஆளும் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மெல்லிய பெரும்பான்மையே உள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் “வீட்டிற்குச் செல்லுமாறு” கோரி தீவு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விண்ணைத் தொடும் பணவீக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள்பற்றாக்குறைமற்றும் நீண்டமின்வெட்டுகளுக்கு மத்தியில், இந்தபோராட்டங்களுக்கு வெகுஜனஆதரவு பெருகி வருகிறது.
வரிசையில் காத்திருக்கும் ‘மக்களின் களைப்பு’ மற்றும் ‘பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் மக்கள் படும் துன்பத்தையும்’ புரிந்து கொண்டதாக பிரதமர் கபடத்தனமாகஅறிவித்தார். ஆனால் அவரது உரையின் உண்மையான நோக்கம், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தக் கோருவதுதான்.
இலங்கை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ [Credit: Wikimedia Commons]
இராஜபக்ஷ கூறியதாவது: “’பாராளுமன்றத்தில் உள்ள225 பேரும்வேண்டாம்’ என்ற கோஷம் இன்று வீதிகளில் எதிரொலிக்கிறது. அதன்மூலம்இந்த ஜனநாயக அமைப்பு நிராகரிக்கப்படுகிறது. இது நல்லதாகத் தோன்றினாலும், அதன் ஆபத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இராஜபக்ஷ எந்த ஜனநாயகம் பற்றி பேசுகிறார்! கோபம் மற்றும் விரக்தியால் திரளாக தெருக்களுக்கு தள்ளப்பட்டுள்ளமக்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த அனைத்து225சுயநல பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்ப்பதற்குறிய அடிப்படை ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் அனைவரும்,பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள்ஆவர்.
ஜனாதிபதி பதவியும் பாராளுமன்றமும் ஜனநாயக உரிமைகள் மீதான அடுத்தடுத்த தாக்குதலுக்கான கருவிகளாகவே உள்ளன. தற்போதைய அரசாங்கம், அதிக ஊதியம் மற்றும் மேம்பட்ட நிலைமைகளைக் கோரிமுன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் தொழிற்சங்கநடவடிக்கையை குற்றமாக்குவதற்கு, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இலவசக் கல்விசீரழிப்புக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள்வீசவும் தடியடிபிரயோகம் செய்யவும் பொலிஸை கட்டவிழ்த்து விட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.