கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை நாமல் ராஜபக்ச -ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும…..

மக்கள் அரசாங்கம் குறித்து ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை தான் உணர்வதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இது சீற்றத்திற்கான தருணம் மாத்திரமல்ல தீர்வுகளிற்கான தருணமும் கூட என தெரிவித்துள்ளார்.
பிரின்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் தங்கள் தி;ட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்கவேண்டும்,மக்களிற்கு அவற்றை அதிகளவிற்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் நாங்கள் மக்களிற்கு தெரிவிக்கவில்லை என்பதே அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் திட்டமிடப்பட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாகவும் அதிகாரிகள் மட்ட நடவடிக்கை காரணமாகவும் முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்பட்டது என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கின்றேன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களது உரிமையை ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஆனால் இந்த ஆத்திரம் பயனற்றது –அது மேலும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய சுற்றுலாப்பயணிகள் வருகையை தடுத்து நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.