பெருந்திரளான மக்கள் வடமிழுக்க தேரேறி வலம் வந்தார் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு மாநகரில் புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்திருவிழாவானது இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

2022.04.07ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலய வருடாந்த உற்சவத்தில் கடந்த 11ம் திகதி மாம்பழத் திருவிழா, 14ம் திகதி திருவேட்டைத் திருவிழா போன்ற சிறப்பு பூசைகள் இடம்பெற்றிருந்தது.

உற்சவத்தின் 09ம் நாளான இன்று தேர்த்திருவிழாவானது பெருமளவு மக்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்ப பூசை வழிபாடுகள், சிறப்பு வாத்திய, நாட்டிய நிகழ்வுகள், தேவார பாராயணங்கள் இடம்பெற்று விக்னேஸ்வரப் பெருமான் உள்வீதி வலம் வந்து அலங்காரத் தேரில் அமர்ந்து பக்த அடியார்களின் அரோகரா முழக்கத்துடன் வடமிழுக்க வெளிவீதி வலம் வந்து அருள் வழங்கும் காட்சி மிக அற்புதமாக இடம்பெற்றது.

தொடர்ந்து நாளைய தினம் 2022.04.16ம் திகதி சித்தரைப் பௌர்ணமி தினத்தில் ஆனைப்பந்தி ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.