கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 3.6 மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழம் விநியோகம் !

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ந்து மூன்றாவது வருடமாக இவ்வாண்டும் கல்முனையன்ஸ் போரமினால்  வெள்ளிக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக கல்முனையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்முனையன்ஸ் போரமானது விடுத்த வேண்டுகோளுக்கமைய 3.6 மில்லியன் ரூபா பெறுமதியான 6000 கிலோகிராம் பேரிச்சம்பழ தொகுதியினை பெஸ்ட் புட் மார்க்கெடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர். குறித்த நிறுவனமானது கடந்த ஆண்டு 8.5 தொன் பேரீச்சம்பழ தொகுதியினை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இப்பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களூடாகவும், பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஊடாகவும் இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன. நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்