வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மின்கம்பத்துடன் மோதி விபத்து.

சாவகச்சேரி நிருபர்
வேகக் கட்டுப்பாட்டினை இழந்த வாகனங்கள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான இருவேறு சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் 16/04/2022 சனிக்கிழமை இரவு பதிவாகியுள்ளன.
கொடிகாமம்-பருத்தித்துறை வீதி ஊடாக பயணித்த வைத்தியர் ஒருவரின் கார் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரம் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான அதேவேளையில் ஏ9 வீதி ஊடாக பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் பிக்கப் வாகனம் ஒன்றும் புத்தூர்சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு விபத்துக்களிலும் வாகனங்கள் பலத்த சேதமடைந்த போதிலும் வாகனங்களில் பயணித்தவர்கள் காயம் ஏதுமின்றி தப்பித்திருபதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்