ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினால் வழங்கி வைப்பு !

 

நூருல் ஹுதா உமர்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான
லயன் திரு.எஸ்.நேசராசா அவர்களினால் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கின்ற நிகழ்வு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைமை காரியாலயத்தில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் கே.உமாரமணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் திரு.டீ .யோகநாதன் பிரதம
அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களான திரு வேற்குமரன் மற்றும் ஜெயகோபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கழகத்தின் தலைவர் திரு லயன்.எஸ்.நேசராசா அவர்களினால் தனது சொந்த நிதியின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த நேசராசா, காரைதீவு மண்ணின் கல்வி வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் பலதரப்பட்ட சேவைகளை செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்