ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை !

நூருல் ஹுதா உமர்

அம்பாரை மாவட்டம் கல்முனை  மாநகர சபை பிரிவில் உள்ள சகல ஊர்களிலுமுள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து  செய்யும் பொது மக்கள்  பெரும் சிரமங்களை தினமும் எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வடிகான் மூடிகள் நீண்டகாலமாக உடைந்து காணப்படுவதுடன் இதனால் வீதியில் போக்குவரத்து செய்யும்  மக்கள்  விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். குறித்த  வீதிகளினூடாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களது போக்குவரத்தினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாகவும் மின்சார தடை நேரங்களில் வீதியில் காணப்படும் வடிகான் மூடிசேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் காணப்படும் வடிகானினால் வாகனங்கள் சேதமடையக் கூடிய நிலை உள்ளதாகவும் வீதியின் குறுக்காக உள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்து காணப்படுவது  பற்றி எவ்விதமான முன்னாய்த்த அறிவுறுத்தல் இல்லையெனவும் இதனால் விபத்துக்களை  சந்திக்க நேரிடுவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் கல்முனை  மாநகர சபைக்கு  தெரியப்படுத்தியும் இது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை  மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உரிய வடிகான் மூடியினை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கல்முனை மாநகர சபை உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.