நிரந்ததர கல்விக் கொள்கையை ஏற்படுத்த முடியாத அபாயகரமான ஒரு நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது… (இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் – பொன்.உதயரூபன்)

(சுமன்)

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மூன்று கல்வி அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு மாறி மாறி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்ற போது நிரந்ததரமான ஒரு கல்விக் கொள்கையை ஏற்படுத்த முடியாத அபாயகரமான ஒரு நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்;டின் ஊழல் மிகு அரசிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மக்களும் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்;கின்ற இவ்வவேளையில் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர் கூட்டணியுடனும், இலங்கை ஆலோசகர் சங்கத்துடனும் இணைந்து கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும், ஆசிரியர் ஆலோசகர்களும் பணிப்பகிஸ்கரிப்;பினை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றார்கள். இந்த அரசு மாணவர்களின் கல்வி தெடர்பாக அக்கறையற்று இருக்கின்றது. மின்சார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தூர பிரதேசங்களுக்குப் பயணம் செய்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஆசிரியார்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோரும் பல இன்னல் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான பிரச்சனை காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களின், மாணவர்களின் வரவும் பின்தள்ளப்;பட்டிருக்கின்றது. கடந்த 20ம் திகதி இது தொடர்பில் இதற்கான தீர்வு கோரி நாங்கள் உரிய தரப்பினருக்குக் கடிதமொன்று அனுப்பியிருந்தோம். ஆனால், கல்வி அமைச்சு எவ்வித உரிய பதிலும் அளிக்கவில்லை.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மூன்று கல்வி அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு மாறி மாறி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்ற போது நிரந்ததரமான ஒரு கல்விக் கொள்கையை ஏற்படுத்த முடியாத அபாயகரமான ஒரு நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது. நாட்டில் சிறந்த கல்விக் கொள்கை இல்லாத காரணத்தினால் தான் இத்தகைய பிரச்சனைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் தற்போது நிலவும் மின்தடை, எரிபொருள் பிரச்சனைகளால் மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்க்;கமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் ஒரு பகிஸ்கரிப்புப் போராட்டத்தினை நடத்த இருக்கின்றோம்.

இது ஒருபுறம் இருக்க வாழைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அவர்கள் வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு அத்துமீறிச் சென்று அந்த பாடசாலையில் ஒழுக்கமில்லை என்று கூறி பல பிரச்சனைகளை அங்கு ஏற்படுத்தியிருக்கின்றார். இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அப்பிரதேசத்திற்குரிய பொறுப்பாளர் என்று கூறிக் கொள்ளும் ஒருவரும் தொலைபேசி மூலம் அப்பாடசாலை அதிபரை அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

இவ்வாறான அச்சறுத்தல்கள் மூலம் சிவானந்தா தேசிய பாடசாலையில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தார்களோ அவ்வாறானதொரு பிரச்சனையை வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலும் ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றார்கள்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் ஆசிரியர் வளங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இப்பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இவ்வாறான அச்சறுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட அக்கட்சியினரின் செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பான செயற்பாடுகள் மேலும் தொடருமாக இருந்தால் இவ்வாறான அராஜக நடவடிக்கைகளை எதிர்த்து ஆசிரியர்கள் நாம் வீதியில் இறங்கிப் போராட வேண்டி ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.