புதிதாக மாநகர சபை உறுப்பினராக பதவியேற்ற சமட் ஹமீட்டுக்கு தாய்க்கழகம் கௌரவமளிப்பு !

நூருல் ஹுதா உமர்

மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக சிரேஷ்ட உதைபந்தாட்ட வீரரும் அக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான அப்துல் சமட் ஹமீட் கல்முனை மாநகர சபைக்கு தேசிய காங்கிரசின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை வரவேற்று பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை மருதமுனையில்  இடம்பெற்றது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் மருதமுனை இளைஞர் அமைப்பாளராகவும், அல்- மீஷான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் மருதமுனை பிரதேச பிரதம இணைப்பாளராகவும் கடந்த பலவருடங்களாக சேவையாற்றி வரும் அப்துல் சமட் ஹமீட் சிறந்த சமூக சேவகராக மக்களினால் அறியப்பட்டவர். அதனை முன்னிட்டு  அப்துல் சமட் ஹமீடை பாராட்டி கௌரவிக்கும் முகமாக மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகத்தினர் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி இதன்போது கௌரவித்தனர்.

மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருதம் விளையாட்டுக்கழக செயலாளர், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள், வீரர்கள், கிராம நிலதாரி, பிரதேச முக்கியஸ்தர்கள், கழக ஆலோசகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் இப்தார் வைபகமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.