அழிந்துவரும் விவசாயத்தை உயிர்ப்பிக்க கோரி சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி !!
நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும், ஆதாரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் கையில் பல்வேறு சுலோகங்களை ஏந்திக்கொண்டு ” விவசாயிகளின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி இன்று நண்பகல் மதியபோசன நேரத்தில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய முன்றலில் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஆட்சியாளர்களே இதை கேளுங்கள் இப்பயாவது – நாட்டைப் பற்றி சிந்தியுங்கள் பஞ்சம் – கை அருகில் விளங்கிக் கொண்டு வேலை செய்யுங்கள், நீர்ப்பாசனக் குடும்பம் – நாங்கள் எல்லோரும் அழுத்தம் தாறம் அரசாங்கத்திற்கு பசளை கொடுங்கள் விவசாயிகளுக்கு இந்தப் போகம் சிறந்து விளங்க விளைச்சல் இல்லை, வயலுக்கு பசளை இல்லை பசளை இல்லாமல் சாப்பிட – அரிசி இல்லை அரிசி வாங்க டொலருமில்லை, தண்ணீர் கொடுக்க – நாங்கள் ரெடி பசளை இல்லாமல் -ஏலாண்டு சொல்றாங்க விவசாயிகள் வேலை நிறுத்தம் வயல் எல்லாம் – காடாகுது, பரகும்பா அரசன் அன்று சோறு கொடுத்தான் – இடைவிடாது அப்படியான நாட்டில் – பிறந்தவர்கள் நாங்கள் இன்று றோட்டில் பட்டினியோடு, பஞ்சத்தை -நாட்டில் உண்டாக்கிட்டு பிச்சை எடுக்கிறோம் – உலகமெல்லாம் பைத்தியம் ஆடுறம் – எல்லாப்பக்கமும் நாங்கள் எல்லாம் -நாகத்தின் வாயில், வயல் வேலைக்கு – டீசல் இல்லை விலையும் நல்லா -ஏறிப் போகுது டீசல் போலினுக்கு – குறையும் இல்லை அரசாங்கத்திற்கு கணக்கே இல்லை என்று பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
கருத்துக்களேதுமில்லை