.கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள் உரிய நேரத்தில் வைத்திய சேவைகளை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்..

நகர்ப்புறங்களில் வாழுகின்ற மக்கள் பெருமளவில் வைத்திய சேவைகளை மிக இலகுவாகப் பெற்றுவருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள் உரிய நேரத்தில் வைத்திய சேவைகளை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் (PSDG) 15 மில்லியன் நிதியொதிக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சீனக்குடா ஆரம்ப பராமரிப்பு வைத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கும் நிகழ்வு (26) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜீ.எம்.கோஸ்த்தா தலைமையில் இடம்பெற்றது.

 

 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த ஆரம்ப பராமரிப்பு வைத்திய நிலையத்தை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்து வைத்ததன் பின்னர், அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல திட்டங்களை முன்வைத்து சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றதுகிராமப்புறங்களில் வாழுகின்ற மக்களின் காலடியில் வைத்திய சேவைகள் மிக இலகுவாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஆரம்ப பராமரிப்பு வைத்திய நிலையங்களை நிர்மானித்து அங்கு வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்து பொதுமக்களின்  கைகளில் பாவனைக்கு கையளித்து வைத்து வருகின்றோம் என்றார்.

 

 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் மோகன குமரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் வி.குகேந்திரன், குறித்த வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் திருமதி ஆர்.முஜீஸ் உள்ளிட்ட மாகாண திணைக்கள அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.