வரணியில் 100பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர்
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு பனை சார் உற்பத்திக் கிராம பயனாளிகள் 100பேருக்கு 27/04 புதன்கிழமை பிற்பகல் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தென்மராட்சிப் பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் சர்வேஸ்வரன் தலைமையில் வரணி வடக்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தென்மராட்சி இணைப்பாளர் உதயசீலன் கலந்துகொண்டு வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கி வைத்திருந்தார்.
கடந்த வருடம் வரணி வடக்கு கிராமம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் சிபாரிசு மூலமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பனை சார் உற்பத்திக் கிராமமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த ஒதுக்கீட்டின் ஒரு பகுதி நிதியில் இருந்து பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனங்கட்டி உற்பத்தி மற்றும் கள் உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.