இரண்டு குடும்பங்களுக்கு ரோட்டரிக் கழகத்தால் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி நிருபர்
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-கண்டி ரோட்டரிக் கழகமும் இணைந்து 28/04 வியாழக்கிழமை வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு நல்லின ஆடுகளை வழங்கி வைத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே இவ்வாறு வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்