உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே பொருளாதார மீட்சிக்கு கை கொடுக்கும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர்
உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே நாட்டின் பொருளாதார மீட்சிக்கு கைகொடுக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
அநீதிகளுக்கும்-அடக்குமுறைகளுக்கெதிராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் புரட்சியின் விளைவே இந்த மே தினம் உருவாகக் காரணம்.
உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக மே முதலாம் தேதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சிக்காக உழைக்கும் ஒவ்வொரு தொழிலாளியினதும் உழைப்பு போற்றுதற்குரியது.உழைக்கும் வர்க்கம் கை ஏந்தும் வர்க்கமாக அல்லாமல் கை கொடுக்கும் வர்க்கமாக மாற வேண்டும்.அதற்காக உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கி, ஏற்றுமதிகளை அதிகரிக்க உள்ளூர் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டை உலுக்கிய கொரோனாவின் பிடியில் இருந்து நாட்டை மீட்க தமது உயிரை துச்சமென நினைத்துப் போராடிய சுகாதாரப் பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள் மற்றும் முப்படையினரை இந்நேரத்தில் நிச்சயமாக நினைவு கூர வேண்டும்.
அதேபோன்று இன்று பொருளாதார மீட்சிக்காக ஒவ்வொருவரும் போராடி வருகிறோம்.உழைக்கும் கரங்கள் உயர்ந்து சுய கௌரவத்தோடு வாழ  சர்வதேச தொழிலாளர் தினத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.