ஜனநாயகம் தழைத்தோங்கி ஏழ்மைநிலை இல்லாதொழிய நோன்புப்பெருநாள் தினத்தில் முஸ்லிங்கள் பிராத்தியுங்கள் : அல்- மீஸான் பௌண்டஷன்

மாளிகைக்காடு நிருபர்

நாடு கஷ்டத்தில் சிக்கி நாமெல்லாம் நடுவீதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இஸ்லாம் கூறும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், பரஸ்பரத்தை பேணி எல்லா இலங்கையர்களும் உறுதியான மன நிம்மதியுடனும், விட்டுக்கொடுக்க முடியா சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து நிறைவான செல்வங்கள் ஓங்கி தன்னிறைவு பெற்ற தேசமாக இலங்கை உருப்பெற உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான சக்தியை வழங்கிட எல்லா முஸ்லிம் சகோதரர்களும் இறைவனிடம் கையேந்தி பிராத்தியுங்கள் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெருநாள் செய்தியில் மேலும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் இத்தருனத்தில்  நாட்டில் இன்று நிலவும் அமைதியற்ற சூழ்நிலை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் அமைதியான நிலைமை உருவாக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை பலப்படுத்தப்பட வேண்டும். என்பதுடன் ரமழான் உணர்த்தும் உன்னதமான படிப்பினைகளை எமது வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் இறுகப் பிடித்துக்கொள்வோமானால் எமக்கெதிரான சக்திகளை முறியடிக்க முடியும்.

எமது செயற்பாடுகளை நாங்கள் சீர்செய்து கொண்டு ஒழுக்க சீலர்களாக முன்மாதிரி மிக்க சமூகத்தினராக இருக்க வேண்டும். இதற்கான பாடங்களையும் ரமழான் எமக்கு செயற்பாட்டு ரீதியில் கற்றுத்தருகின்றது. இத்திருநாளில் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈத் முபாரக்!.  நாட்டில் இன நல்லிணக்கம்  சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்கள் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதற்கும் இத்திருநாளில் அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.