சுயேச்சை எம்.பி.க்கள் கருத்தியல் ரீதியாக தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு உடன்படுகின்றனர்!

விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயேட்சை எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கான கருத்தியல் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.
தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
SLPP தலைவர், அமைச்சர் (பேராசிரியர்) G.L பீரிஸ், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் SLPP ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோர் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.