சாவகச்சேரியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரை அண்மித்த பகுதியில் ஏ9 வீதியில் 03/05/2022 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும்-வவுனியாவில் இருந்து வந்த பிக்கப் வாகனமும் சாவகச்சேரி இலங்கை வங்கி முன்பாக ஒன்றோடு ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் கடமை முடித்து வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.
ஏழாலையில் கடமையாற்றும் கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 30வயதான நிசாந்தன் என்ற இளம் உத்தியோகத்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்