1990 அம்பியூலன்ஸ் சேவையை நடத்த பணம் இல்லை?

இலவச அம்பியூலன்ஸ் சேவையான 1990 சுவ செரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.

 

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

நிதி இல்லாத நிலையிலேயே 1990 அம்பியூலன்ஸ் சேவை இன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

கடந்த நல்லாட்சி காலப் பகுதியில் இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு 1990 இலவச அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்