யாழில் வயோதிபப் பெண் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிமையில் வசித்துவந்த 64 வயதுடைய வயோதிப் பெண்ணே படுகாயம் அடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்