கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது!

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி தலைவர்கள் இதன் போது கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, இன்றைய கூட்டத்தின் போது நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கான திகதிகள் தொடர்பில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்