இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வாகனம் மீது தாக்குதல்!!!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்பு படைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த மகிந்தவின் ஆதரவாளரொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

 

இந்த நிலையில் அரசாங்கத்தை பதவி விலகக்கோரும் மக்கள் ஆத்திரிமடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் வீடுகள் தாக்கப்படுவதுடன், மகிந்தவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்