பிரதமர் மட்டுமல்ல, அரசாங்கமும் பதவி விலக வேண்டும் -ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்கள் தொடருமானால் அது பொருளாதாரத் திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அனைவரும் அமைதியாக இருக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்