மட்டக்களப்பில் காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள் ஊறணி சந்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஓன்றினைந்து காலிமுக திடலில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையரடி வரையும் ஊர்வலமாக சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாடகாரர்கள் கலைந்து சென்றனர் .
இந்த ஆர்ப்பாட்த்தையடுத்து அந்த பகுதியில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு ஆர்ப்பாட்காரர்கள் ஊள்நுழைவார்கள் என்ற அச்சத்தையடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டு அந்த பகுதியில் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்