அலரிமாளிகைக்கு பின்னால் அழிக்கப்பட்ட ஜீப்பில் கண்டெடுக்கப்பட்ட வாகன எண்களின் விபரப் பட்டியல்

அலரிமாளிகைக்குப் பின்னால் முற்றாக அழிக்கப்பட்ட ஜீப்பில் வாகன எண்களின் பட்டியலை எதிர்ப்பாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் 13 வாகனங்களின் எண்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களும் அடங்கும்.
இந்தப் பட்டியலில் பல பேருந்து எண்களும் அடங்குகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலரிமாளிகையை சென்றடைவதற்கு பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களால் பஸ்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கங்காராம, நவம் மாவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பேருந்துகள் அப்பகுதியை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் மக்கள் தாக்கியதாக தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்