ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பித்தனரா? – இந்திய தூதரகம் மறுப்பு

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதான பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடபட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களது வதிவடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுடைய கோபாவேசம் அரச தரப்பினரது சொத்துக்களை அழித்தொழிப்பதாக மாறி நாடு முழுவதும் தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு இலங்கையில் ஏற்பட்டுள்ள தமக்கு எதிரான எதிர்ப்பலையில் இருந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் எந்நேரமும் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை கடற்படை முகாமில் நாட்டைவிட்டு தப்பிஓடும் நோக்கில் ராஜபக்ச தரப்பினர் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து திருகோணமலை கடற்படை முகாமும் மக்களின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவையாகும்.
இவ்வாறான செய்திகளை மறுக்கும் அதேவேளை, வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.