நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீக்கிரை! (படங்கள்)

ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!

ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் காரியாலயம்(செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீக்கிரை! (படங்கள்)

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.