நீடிக்கப்படுகின்றதா ஊரடங்கு…! – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்
இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக கடந்த 9ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை