நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கூட கோட்டாபய மகிந்த தேடிப்பார்க்கவில்லை! வீடுகள் எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கவலை
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் நாங்கள் எப்படி எங்கு இருக்கிறோம் என்பது தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ தேடிப்பார்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தென்னிலங்கையில், கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
அவர்கள் இவ்வாறான பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், அரச தலைவரோ முன்னாள் பிரதமரோ, கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவோ நிலைமை என்ன என்பது தொடர்பான தேடி அறியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அசௌகரியத்தில் இருப்பதாகவும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமை பற்றி அறிவிக்கக் கூடிய எந்த பொறுப்புவாய்ந்த நபர்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், அவர்களில் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருப்பதாக பேசப்படுகிறது. தாம் எப்படி, எங்கு இருக்கின்றோம் என்பது சம்பந்தமான எவரும் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்காது குறித்து பலர் வெறுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை