இன்று இரவு கடுமையாக்கப்படும் ஊரடங்கு…! – சற்று முன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று  காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.