தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நாமல் அனுதாபம் – வன்முறையை நிறுத்துமாறு அழைப்பு!

பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். வன்முறையை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்