எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!!!

எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கையில் விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
யால பருவம் தோல்வியடைந்ததன் விளைவாக அரிசி, பிற தானியங்கள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மகா பருவத்தில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மகா பருவத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்