பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்