நிதியமைச்சராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு! – ஹர்ஷ டி சில்வா கொடுத்த பதிலடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா,

“இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை நான் எதிர்க்க முடியாது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்னால் செல்ல முடியாது.

என்னை நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளை மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால் நான் அவ்வாறு செய்ய மாட்டேன்.

ஒரு அரசியல் குடும்பத்தை பாதுகாப்பதற்காக பதவியை ஏற்றுக் கொள்வதை விட வீட்டிற்கு செல்வதே சிறந்தது.

பொதுமக்களின் விருப்பங்களுக்குப் பதிலளிப்பதே அரச தலைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் .

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிர்வாக முறையைப் பாதுகாப்பதை விட, தற்போதுள்ள அமைப்புகளை சீர்திருத்துவது மிக முக்கியமானது.

நாம் தனிப்பட்ட இலாபங்களுக்காக ஒருபோதும் அரசியலில் ஈடுபடவில்லை, தனிப்பட்ட அரசியல் இலாபங்கள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்”, எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.