உறுதியான நிலைப்பாட்டுடன் கோட்டாபயவுக்கு சென்ற கடிதம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது முடிவை கடைசி நேரத்தில் மட்டுமே தெரிவித்தார் என்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கூற்றறை சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.

நேற்று அரச தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு, சஜித் அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் பலமுறை சந்தித்து தமது நிபந்தனைகள் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு உட்பட்டு அரச தலைவர் பதவி விலகினால் மாத்திரமே பிரதமர் பதவியை தான் பொறுப்பேற்க இணங்கியதாக சஜித் நினைவுபடுத்தியுள்ளார்.

மக்களின் ஆணையைப் புறக்கணித்து நேரடியாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பரிந்துரையையும் செய்யாது என்றும் சஜித் அரச தலைவருக்கு அறிவித்துள்ளார்.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்