ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கைகளையும் முன்வைத்தனர்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் புதிய பிரதமரிடம் கையளித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினதும் கோரிக்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
8 கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதமர் மக்களின் குரல்களை செவிமடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும்,18 மாதங்களிற்கான இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் அதில் 15 அமைச்சர்கள் மாத்திரம் இடம்பெற்றிருக்கவேண்டும்,20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 21 வது திருத்தத்தை நிறைவேற்றவேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நிவாரண வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும்,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வு செய்யவேண்டும்,உட்பட 8 கோரிக்கைகளைஅவர்கள் முன்வைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.