ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல்

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல

திருக்கோவில் நிருபர்

 

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்து சோதப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (13) ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டாh.;

 

கடந்த செவ்வாய்க்கிழமை (10) ம்திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினாரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

 

இதனையடுத்து ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் நூற்றுக்கணக்கானோர் வியாழக்கிழமை (12) ஒன்றிளைந்து இந்த ஆடை தொழிற்சாலை சேதமாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்றிறுத்துமாறு கோரி ஆடை தொழிற்சாலையில் இருந்து பொலிஸ் நிலையம் நோக்கி சென்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பொலிசார் இடைமறித்து சம்பவம்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக ஆர்ப்பாட்டகாரரிடம் வாக்குறுதியளித்தனர்.

 

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது ஹோட்டல் இருந்து கொள்ளையிடப்பட்ட றைஸ்குக்கர் உட்பட சில பொருட்களுடன் 8 பேரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

இதேவேளை தீயிடப்பட்ட ஹோட்டல் மற்றும் கடை ஆகிய கட்டிடங்களை வாடகைக்கு பெற்று அதனை நடாத்தி வந்துள்ளதாகவும். பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பித்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.