ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அப்படியே இருக்கிறோம். -பிரதமர் கடிதத்திற்கு சஜித் பதில்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டு இன்று பிரதமர் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே சஜித் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அப்படியே இருக்கிறோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயலும் பொழுது உங்களுடன் ஒத்துழைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்