சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் மோசமடைகின்றது- சீற்றமடைந்த பொதுமக்களை கட்டுப்படுத்த இராணுவம் அழைப்பு

கொழும்பு ஸ்லேவ்ஐலன்ட் பகுதியில் சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர்.
நாங்கள் இன்று காலை முதல் இங்கு நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை – இவர்கள் செல்வந்தர்களிற்கும் ஹோட்டல்களிற்கும் சமையல் எரிவாயுவை வழங்குகின்றனர் என நான் கருதுகின்றேன் என பெண்மணியொருவர் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவை வழங்குங்கள் என தெரிவித்து பெண்களும் முதியர்வர்களும் கோசமெழுப்பினர்.
வீட்டில் சிறுவர்கள் உள்ளனர்-எங்களால் அவர்களிற்கு உணவு சமைக்க முடியவில்லை-ஒரு மாதகாலமாக நாங்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என பெண்ணொருவர் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தைமுன்னோக்கி நகர்த்துவதே தனது முதல் முன்னுரிமைக்குரிய விடயம் என ஊடகங்களி;ற்கு தெரிவித்திருந்தார்.
நான் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணவிரும்புகின்றேன்-பெட்ரோல் டீசல் மின்சாரம் மக்களிற்கு கிடைப்பதை உறுதி செய்யப்போகின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்
நாங்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான நாட்டை உருவாக்கவேண்டும்இமக்கள் மூன்று வேளை உணவுஉண்கின்ற-நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்காத நாட்டை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கின்றது-
டைம்ஸ் ஒவ் இந்தியா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.