கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை- சஜி;த்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரை இன்று சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் நானும் முன்வைத்துள்ள வேண்டுகோள்கள் ஒரே மாதிரியானவை என தெரிவித்துள்ள அவர் எந்த சூழ்நிலையிலும் மக்களின் போராட்டத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர் பேராட்டத்திற்கு ஒருபோதும் துரோகமழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் விலகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்