செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இதன் காரணமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களது ...

மேலும்..

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று(வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த ...

மேலும்..

இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது!

இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு ...

மேலும்..

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு!

யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன்னால் கூடி பொங்குதமிழ் ...

மேலும்..

வடக்கு ரொறன்ரோவில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து!

வடக்கு ரொறன்ரோவில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஒன்ராறியோ மாகாண ...

மேலும்..

இணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை தொடர்ந்து அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். இணுவில் ...

மேலும்..

மகாசங்கத்தின் ஆசீர்வாதமின்றி புதிய அரசியலமைப்பில்லை! – அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதமின்றி அரசியலமைப்பை முன்வைக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டால் மகாசங்கத்தினரை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிப்பு குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. பௌத்த சாசன பணிக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால ...

மேலும்..

மோசடி குறித்து விசாரிக்க மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு!

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் ...

மேலும்..

மட்டக்களப்பு இளைஞன் படுகொலை: நான்கு சந்தேகநபர்கள் கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பகுதியில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இளைஞர் அணிகளுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட ...

மேலும்..

தமிழர்களுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடிய கனேடிய பிரதமர்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். டொரொண்டோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் வைத்து அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார். கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் ...

மேலும்..

ஒட்டாவாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

ஒட்டாவாவின் Vanier பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை ...

மேலும்..

நாளை முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்தில்

இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு – 10 ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று (16) எழுத்து மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதேநேரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவால் ...

மேலும்..

கடந்த 16 நாட்களில் 2000 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் ...

மேலும்..

தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது – நீதிக்கான பெண்கள் அமைப்பு சாடல்

மாகாண சபை  தேர்தலை   இவ்வருடத்தில்  நடத்தாமல்  தொடர்ந்து  பிற்போடுவதற்காகவே  அரசாங்கம் புதிய  அரசியலமைப்பினை   உருவாக்க  முயற்சிப்பதாக  நீதிக்கான  பெண்கள்  அமைப்பின்  தலைவர்  சாவித்ரி  குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக, மதத்திற்கான கேந்திர  மத்திய நிலையத்தில்  நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும்  ...

மேலும்..