செய்திகள்

சிறை அதிகாரிகளுக்கு மிளகாய் பொடிவீசிவிட்டு தப்பிச்சென்ற கைதி துரத்திப்பிடிப்பு!

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மிளகாய்பொடி தூவிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரட்டைகொலைதாரியான கைதியை மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் துரத்தி பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் இரட்டை கொலை குற்றவாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதன்போது நேற்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது குறித்த கைதி மிளகாய்பொடிகளை தூவிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் ...

மேலும்..

தீண்டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன்!

குருநாகல் ஹெட்­டிப்­பொல, நாகொல்­லா­கொட பகுதியில்,தன்னைத் தீண்­டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன் ஒருவர். இத­னை­ய­டுத்து சுக­யீ­ன­ம­டைந்த இளை­ஞனை அவ­ரது உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லையில் அனுமதித்துள்ளனர். அவரால் கடித்து துண்­டாக்­கப்­பட்ட பாம்­பையும் உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். குறித்த இளைஞர் நண்­பர்­க­ளுடன் இணைந்து மதுபானம் ...

மேலும்..

ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் உயர்ஸ்தானிகர், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி ...

மேலும்..

தேர்தல் முடிந்த போதும் அச்சத்தின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள்

தேர்தல் முடிந்த இந்த சூழலில் எமது மக்கள் ஒரு அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அச்சப்படத் தேவையில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் தற்போது  ரணில் உள்ளிட்ட பல ஐ.தே.க பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...

மேலும்..

தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தேசம் துருவப் படுத்தப்பட்டுளதைக் காட்டுகிறது!

நக்கீரன் புதிய சனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய இராசபக்சவுக்கு பல நாட்டுத் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரீவித்துள்ளார்கள். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா, இரான், யப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டுத் ...

மேலும்..

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு.

கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள் விளையாடி வருகின்றார்கள். அவ்வாறு விளையாடும் ஒரு விளையாட்டு கேட்டல் மற்றும் ...

மேலும்..

சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் – ஸ்ரீதரன்

சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச ...

மேலும்..

திருகோணமலை சஜித் வசம்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய அவர், 166841 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 54135 வாக்குகளைப் ...

மேலும்..

வடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி!

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாச 55585 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 3238 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 526 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமார திசாநாயக்க ...

மேலும்..

பொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி

2019 ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 147340 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். குறித்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 1,12473 வாக்ககளைப் பெற்றுள்ளார்.

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் ஆரம்பமாகி முதல் மூன்று மணித்தியாலங்கள் தொடர்பான நிலைவரம்

ஜனாதிபதி தேர்தல் ஆரம்பமாகி  முதல் மூன்று மணித்தியாலங்களில் சில சிறிய சம்பவங்கள் இடம்பெற்ற போதும் எந்ததொரு பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. மன்னார், பதுளை மற்றும் மதுகம உள்ளிட்ட பகுதிகளிலேயே பல சிறிய ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – இதுவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம்

நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இதுவரையிலான காலப்பகுதியில் காலியில் 25% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், குருணாகலில் 30-35% ...

மேலும்..

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு – றிஷாட் பதியுதீன்

இனவாதிகள்கூட்டுச்சேர்ந்துள்ளஅணியைஜனாதிபதித்தேர்தலில்சிறுபான்மைமக்கள்ஒட்டுமொத்தமாகநிராகரிக்கவேண்டுமெனஅகிலஇலங்கைமக்கள்காங்கிரசின்தலைவரும்அமைச்சருமானறிஷாட்பதியுதீன்கோரிக்கைவிடுத்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நேற்று காலை முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது, சிறுபான்மைமக்களை"வந்தான்வரத்தான்"எனக்கருதும்இனவாதிகளுக்குஇந்ததேர்தலில்நாம்ஒன்றுபட்டுபாடம்புகட்டுவோம்.நமதுசமூகம்தன்மானத்துடனும்,தலைகுனிவின்றியும்வாழவேண்டும்என்பதற்காகவேசஜித்பிரேமதாசவைஆதரிக்கின்றோம்.கடந்தஒருதசாப்தகாலமாகஇனவாதிகள்சிறுபான்மைமக்களைகொடுமைப்படுத்துகின்றனர்.கொச்சைப்படுத்துகின்றனர்.மதக்கடமைகளுக்குதடைவிதிக்கின்றனர்.மதத்தலங்களைஉடைக்கின்றனர்.எங்களைதீவிரவாதிகளாகவும்,இனவாதிகளாகவும்சித்தரித்துஇந்தநாட்டில்பெரியபிரளயம்ஒன்றைகிளப்பிவருகின்றனர்.சிறையில்வாடும்தமிழ்இளைஞசர்களைவிடுவிக்கச்சொல்லிகோரிக்கைவிடுத்தால்அதனைஇனவாதமாகபெரும்பான்மைச்சமூகத்தில்காட்டுகின்றனர்.காணாமல்போனவர்களைகண்டுபிடித்துத்தருமாறுகேட்டால்அதுவும்அவர்களால்இனவாதமாகபார்க்கப்படுகின்றது.நாங்கள்எவருக்கும்இரண்டாம்தரப்பிரஜைகளாகவாழவேண்டியஅவசியம்கிடையாது.தன்மானத்துடனும்சுயகெளரவத்துடனும்பெரும்பான்மைசமூகம்அனுபவிக்கும்அத்தனைஉரிமைகளையும்பெற்றுவாழ்வதற்குநாம்உரித்துடையவர்கள்.அவ்வாறானஒருசூழலைஏற்படுத்துவதற்குநல்லஒருதலைவனாகசஜித்பிரமேதாசவைஇனம்கண்டுள்ளோம்.அவரைஇந்தநாட்டுமக்கள்ஒருதேசியவரலாற்றுநாயகனாகஇப்போதுபார்க்கின்றனர். "கடந்தகாலங்களில்நடந்ததுபோலன்றிஅனைத்துஇனத்தவர்களையும்சமமாகநடத்துவேன்எனவும்நிம்மதியுடன்வாழச்செய்வேன்"எனவும்சஜித்உறுதியளித்துள்ளார். யுத்தத்தால்பாதிக்கப்பட்டஇந்தமாவட்டமக்களுக்குபல்வேறுதேவைகள்உள்ளன.யுத்தத்தின்பிறகுமுதன்முதலாகதுணுக்காய்,பாண்டியகுளத்திலேயேமீள்குடியேற்றத்தைபூச்சியத்தில்இருந்துஆரம்பித்தோம்.மக்களின்தேவைகளும்உட்கட்டமைப்புவசதிகளும்இன்னும்பூரணப்படுத்தப்படாதநிலையில்அவற்றையும்எதிர்காலத்தில்பூர்த்திசெய்யவேண்டிஇருக்கின்றது.எனவேஇனவாதிகளின்கைகளுக்குள்இந்தநாடுமீண்டும்சிக்கினால்நமதுஎதிர்பார்ப்புகளஅனைத்துமேஏமாற்றமாகிவிடும்நேர்மையானதலைவரானசஜித்தைஆதரித்துஅவரைவெற்றிபெறசெய்வோம்.. இந்தநிகழ்வில்ஜனாதிபதிவேட்பாளர்சஜித்பிரேமதாச,அமைச்சர்ஹக்கீம்ராஜாங்கஅமைச்சர்விஜயகலாமகேஸ்வரன்,பாராளுமன்றஉறுப்பினர்டிஎம்சுவாமிநாதன்,முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர்ஹுனைஸ்பாரூக்,மாந்தைகிழக்குபிரதேசபைதவிசாளர்நந்தன்உட்படபலர்உரையாற்றினார்.  

மேலும்..