November 6, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காகிதத்தில் கப்பல் விட்ட 14 மாத குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது!

மதுரங்குளிய பிரதேசத்தில் நீரோடை ஒன்றில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை, சக்கரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில், அவரது தாயார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு, புத்தளம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மதுரங்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதுரங்குளி சிங்கள மகா வித்தியாலயத்துக்கு ...

மேலும்..

மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள்!

அரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள் என மாவீரர் பணிக்குழுவின் முன்னாள் செயலாளர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இக் கார்த்திகை மாதமானது எமது மக்களின் நிரந்தர விடியலுக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களின் புனித மாதமாகும்.  ...

மேலும்..

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் உறுதியளித்துள்ளார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்; யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள மக்களுக்கு 500 உலருணவுப் ...

மேலும்..

நிர்மலா சீதாராமனை தமிழ் அரசியல் கட்சிகள் சந்திக்காதமை எதற்காக? தெளிவுபடுத்துகிறார் சுமந்திரன்

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்குத் தமக்குப் போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...

மேலும்..

காயங்களுடன் யாழ்.இளைஞர் சடலம் வெள்ளவத்தைக் கடற்கரையில் மீட்பு!

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன

மேலும்..

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சனிக்கிழமை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இச்சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும்..

நீதி நிலைநாட்டப்படுதல் வேண்டுமாம் தினேஸ் சாப்டர் குடும்பம் கோரிக்கை!

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்; தீர்ப்பைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் அவர்கள் அதில் தெரிவித்துள்ளவை வருமாறு - நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி, தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

  முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, 4 வருடங்களின் பின்னர், மீண்டும் அதனை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக சனிக்கிழமை புனானையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் வைத்து ...

மேலும்..

கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களின் நிறைவேற்றுக்குழு மன்னாரில் கூடியது!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ...

மேலும்..

வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட நபரை மடக்கிப் பிடித்த மட்டக்களப்புப் பொலிஸார்! பெருமளவு பொருள்கள் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு இடங்களில் வீடுகளின் ஜன்னல் கிறில்களை கழற்றி உள்ளே நுழைந்து, நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்ட நபரை ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்தனர். கடந்த மே 21ஆம் திகதி மட்டக்களப்பு ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பில் மாவை சோ.சேனாதிராசா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் ...

மேலும்..

ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் தமிழரசு மாநாடு: சம்பந்தன் விவகாரம் குறித்து சுமந்திரன் விளக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21 ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் ...

மேலும்..

கிரிக்கெட் சபையில் நானும் இருந்தேன் அது ஊழல் என்று எனக்குத் தெரியும்! மனம்திறந்தார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

முன்னைய வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து மாறுபட்டு மாற்று வரவு செலவுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்கள் செலவுக்கு ...

மேலும்..