மாநாட்டில் பாதியில் வெளியேறிய ரிஷி சுனக்! பார்வையாளர்கள் அதிர்ச்சி
எகிப்து நாட்டில் இடம்பெறும் பருவகால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திடீரென பாதியில் எழுந்து சென்றதாக குறப்படுகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரிஷி சுனக் அவர்களும் கலந்துகொண்டார் .

இதனிடையில் பருவகால மாற்ற மாநாடு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பாதியிலேயே ரிஷி சுனக் திடீரென வெளியேறினார். இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரிஷி சுனக் உதவியாளர் ஒருவர் அவரிடம் ஏதோ கூறினார் என்றும் அதனால் ரிஷி சுனக் அவசரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் ப மாநாட்டிலிருந்து ரிஷி சுனக் வெளியேறி இதற்கான காரணம் எதுவும் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் திடீரெனரிஷி சுனக் பாதியில் வெளியேறியதால் உலக தலைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது

















கருத்துக்களேதுமில்லை