திரையரங்கில் அஜித் ரசிகர் மரணம்.. விபரீதமாக மாறிய விளையாட்டு
இன்று அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்துள்ளது.

துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் இரு தரப்பு ரசிகர்களும் தங்களுடைய நாயகனை பல வகையில் கொண்டாடி வந்தனர்.
அந்த கொண்டாட்டத்தின் சமயத்தில் லாரி மீது ஏறி நடனமாடிய அஜித்ரசிகர் பரத்குமார் என்பவர் மரணமடைந்துள்ளார். விளையாட்டாக அவர் செய்த ஒரு காரியம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

இதற்காக தான் பல முறை நடிகர் அஜித் இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால், அதை மீறியும் செய்த ரசிகர் பரத்குமார் உயிரிழந்துள்ளது பலருக்கும் வேதனையை கொடுத்துள்ளது.












கருத்துக்களேதுமில்லை