ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்…

இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், இலக்கம் 13 இல் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று வியாழக்கிழமை (23-07) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு 37 வருடங்கள் ஆன பிறகும் சர்வதேசம் இதனை இனப்படுகொலை என ஏன் இன்னும் பிரகடனப்படுத்தவில்லை என்பதனை இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

இவ் அசாதாரன சூழலிலும் தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு வேண்டியும், இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும், பிரித்தானிய அரசாங்கத்தின் கொவிட் 19 வழிகாட்டுதலின் படி ஆர்பாட்டகார்ர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் தமிழ் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், தமிழ் இனச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.