நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நெல்லிக்காய்…

சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. மேலும் ஈரலைத் தூண்டி, நன்கு செயற்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற இது உதவுகிறது.

நெல்லிக்காயில் விற்றமின் ‘சி’ 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து 1.2 மில்லிகிராம் இருக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதைத் தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக்கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவைக் கொடுக்கிறது.

மேலும் நுரையீரலைப் பலப்படுத்தி சுவாச நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. மூளைச் செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. உடல் எடையைக் கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் விற்றமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயற்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.