குப்புறப்படுக்கும் ஆண்களா நீங்க! அப்போது மிஸ் பண்ணாம படிங்க

பொதுவாகதூங்கம் போது சில படிமுறைகள் கடைப்பிடிக்காவிட்டால் அது அடுத்த நாளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் காலையில் உடல் சோர்வு, உடம்பு வலி, தலைவலி மற்றும் கண்ணில் கருவளையம் என பல பிரச்சினைகளை ஏற்படுகிறது.

மேலும் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மனிதர்களின் உடல் நிலை வெகு நேர செயற்பாட்டிற்கு பின்னர், ஒரு கட்டத்தில் ஓய்வு நிலைக்குச் செல்ல ஆரம்பித்து விடும்.

இதனால் தான் தூக்கம் மிகவும் அவசியம் என கூறுவார்கள். இதன்படி,ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படுக்கைகளில் மாற்றம் ஏற்படும் போது காலையில் நமது உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அந்தவகையில் முறையாக படுக்காவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

குப்புறப்படுக்கும் ஆண்களா நீங்க! அப்போது மிஸ் பண்ணாம படிங்க | Disadvantages Of Sleeping On Stomach

1. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தூங்கும் போது வளைந்து நெலிந்து தூங்குவார்கள். இவ்வாறு தூங்கும் போது கழுத்து மற்றும் முதுகெலும்பு ஆகிய இரண்டு பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறு தூங்கினால் காலப்போக்கில் முதுகெலும்பு வளைய ஆரம்பிக்கும்.

2. ஆண்கள் அதிகமாக நிமிர்ந்து தூங்குவார்கள் காரணம் என்ன தெரியுமா? வயிற்று பாகங்களை அழுத்தியபடி தூங்கும் போது முதுகெலும்பு மற்றும் வில்லைகள் அதற்கு இடையிலிருக்கும் நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

3. சிலர் ஆண்கள் குப்புறப்படுப்பார்கள் இதனால் அவர்களின் தலை கீழ் நோக்கியிருக்கும் அப்போது தலையை நேராக வைத்து மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். இதன் போது அதிகமான கழுத்துவலி மற்றும் தலைவலி என்பன பிரச்சினையாக இருக்கும்.

4. மேலும் தலையை ஒரு பக்கமாக சாய்த்துமூச்சை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கழுத்துப்பகுதி ஒரு பக்கமாகவே தான் இருக்கும். இதனால் நாளடைவில் கழுத்தில் ஏதாவது மாற்றம் இருப்பது போன்று உணரலாம்.

5. தூங்கும் போது சிலர் குறட்டை விடுவார்கள். இந்த பிரச்சினை குப்புறப்படுக்கும் போது சற்றுகுறைவாக தான் இருக்கும். இது மட்டும் தான் குப்புறப்படுப்பதில் ஒரு நன்மையாக பார்க்கப்படுகிறது. மேலும் சிலர் யோகசன முறை என கூறிக் கொண்டு குப்புற தூங்குவார்கள். ஆனால் அவ்வளவு நன்மையல்ல என்பது நோய்கள் வந்த பின்னரே தெரியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.