மலேசியா செல்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு !

சுற்றுலா விசாவில் வேலைக்காக மலேசியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு பணிக்கு அனுப்பும் மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விஷேட புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பணியகம் அறிவுறுத்துகிறது.

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகவும், சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வேலைக்காக அனுப்புவதாகக் கூறி வேலை தேடுபவர்களிடம் பல்வேறு நபர்கள் பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மலேசியாவுக்குள் நுழைந்த பிறகு சுற்றுலா விசாவை பணி விசாவுக்கு மாற்ற முடியாது என வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 0112864241 அல்லது தொலைநகல் இலக்கம் 0112864118 அல்லது mgr_invest@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்புமாறு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.