36 வயதில் கவர்ச்சி நடனம்? இணையத்தை சூடேற்றிய தீபிகா படுகோன்

ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் “பேஷரம் ரங்” பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார், ஏற்கனவே இவர்கள் இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’ படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இணையத்தை சூடேற்றிய தீபிகா படுகோன்

இதைப்போன்று பதான் படமும் ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர், இந்த படம் பான் இந்தியா படமாக 2023ம்ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில், பேஷரம் ரங் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

அதீத கவர்ச்சியான உடையில் தோன்றும் தீபிகா படுகோனின் நடனம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்