இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..T

  1. யாழ்ப்பாணம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14.10.2023) கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தலைமன்னார்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது | Indian Fisherman Arrested Illegal Fishing Srilanka

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் நேற்று (14.10.2023) சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது | Indian Fisherman Arrested Illegal Fishing Srilanka

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த 15 இந்திய கடற்றொழிலாளர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.